பவானி அருகே தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
பவானி அருகே தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
பவானி அடுத்த பருவாச்சி கண்ணாடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 43). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நல்லசாமி வேலை முடிந்து கூடுதுறை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பவானி கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28), சொக்காரம்மன் நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (27), செங்காடு வினாயகர் கோவில் பகுதி டேவிட் (29) ஆகியோர் அங்கு வந்தனர்.
இதில் கார்த்திக் நல்லசாமியிடம் இங்கு எதற்காக நிற்கிறாய் என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர்கள் 3 பேர் நல்லசாமியை தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். இதில் நல்லசாமிக்கு முகம், முதுகு, மார்பு பகுதிகளில் அடிப்பட்டது. நல்லசாமியை பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.