கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-19 10:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ல.கள்ளிபட்டி பகுதியை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 34).எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மைதிலி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கவாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் சேலையால் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்தவர்கள்,  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோபிசெட்டிபானையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து,  என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News