அத்தாணி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள கைகாட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த. அருகேயுள்ள ஓசைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 22). இவர் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தனது இரு சக்கர வாகனத்தில், ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அத்தாணி கைகாட்டி பகுதியில் வந்த அருணாசலம், திடிரென எதிரே வந்த வாகனத்தை கவனிக்காமல் பிரேக் அடித்தவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் அருணாசலத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர், அருணாச்சலம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அருணாச்சலம் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் பிழைத்து இருக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.