பவானிசாகர்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பவானிசாகர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது காணவில்லை. இதுகுறித்து அவருடைய தாயார் பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நவீன் (வயது 22) என்பவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர்.