நம்பியூர் அருகே தண்ணீர் தொட்டியில் முழ்கி வாலிபர் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முழ்கி வாலிபர் உயிரிழந்தார்.;
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள, சாலைப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் ரமேஷ்குமார். ரமேஷ்குமார் தனது நண்பர்களான அன்பரசு, கார்த்திக், மகேஸ் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்குள்ள விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டியில் 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ரமேஷ்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் முழங்கினார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரமேஷ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.