கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் அயலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வரும் தங்கமணி என்பவருக்கும் திருமணமாகி, இருவரும் மாணியக்காரன்பாளையத்தில் வசித்து வந்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே வீட்டை விட்டு வெளியே சென்ற ஆனந்தகுமார், கவுந்தப்பாடி அருகே உள்ள வைரமங்கலத்தில் விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.