சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த வாலிபர் கைது

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2021-12-04 15:00 GMT

சதீஷ்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் வரதம்பாளையத்தை, சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் கோபி செல்வதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மோதியது போல் சென்ற வாலிபர், கிருஷ்ணராஜிடம் இருந்து 200 ரூபாயை பிட்பாக்கெட் அடித்தார். இதனை கண்ட பொதுமக்கள், வாலிபர் பிடித்து சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னசாமி மகன் சதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News