ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலை விரிவாக்கம்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (டிச.26) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (டிச.26) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்துறை சாலையும், சம்பத்நகர் செல்லும் சாலையும் உள்ளன. இந்த இடத்தில் போலீஸ் நிழற்குடையுடன் தானியங்கி சிக்னல் உள்ளன.
இந்நிலையில், தற்போதுள்ள போலீஸ் நிழற்குடை அமைந்துள்ள இடத்தை மையமாக வைத்து ரவுண்டானா அமைத்து, சாலையை அகலப்படுத்தவும், சம்பத் நகரில் இருந்து வருவோர், ஈரோடு பேருந்து நிலையம், பெருந்துறை சாலை, ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு ஏதுவாக மைய தடுப்புகளை அகற்றி, மாற்றி அமைப்பது தொடர்பாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ். மாநகர பொறியாளர் விஜயகுமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.