குடிநீரில் புழு: சத்தியமங்கலத்தில் நோய் ஆபத்து- அதிகாரிகள் பாராமுகம்
சத்தியமங்கலம் நகராட்சியால் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.;
சத்தியமங்கலம் நகராட்சியால் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் மிதக்கும் புழு.
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 24 மற்றும் 25 வது வார்டு பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இன்று வினியோகிக்கப்பட்ட குடிநீரில், புழுக்கள் இருந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த போது, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகளின் போக்கை கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு நிலவியது.