கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு பேரணி!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.;
கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட பொம்மநாயக்கன்பாளையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.
இந்த முகாமில் மலேரியா காய்ச்சல் பரவும் விதம், மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், மலேரியா காய்ச்சலுக்கான இரத்த தடவல் பரிசோதனையின் அவசியம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி நர்சிங் மாணவியர்களை பங்கேற்ற உலக மலேரியா தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பொம்மநாயக்கன்பாளையம் காலனி வரை சென்று முடிவு பெற்றது. பேரணி சென்ற வழியில் பொதுமக்களுக்கு உலக மலேரியா தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரா மெடிக்கல் கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர் கார்த்திகா தேவி, பள்ளி சிறார் நல மருத்துவ குழுவினர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள் பிரகாஷ், சேதுராமன், சுகாதார செவிலியர் ஸ்வேதா, கிராம நிர்வாக அலுவலர் வேலுமணி, ஊராட்சி மன்ற செயலாளர் சதீஷ், அங்கன்வாடி அமைப்பாளர் பரிமளா, நர்சிங் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், அனைவராலும் உலக மலேரியா தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.