அந்தியூரில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.;
நாடு முழுவதும் உலக ரத்த கொடையாளர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரத்த தான இயக்கம் சார்பில், உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம், சத்தி ரோடு, சிங்கார வீதி, தேர் வீதி, பர்கூர் சாலை வழியாக மீண்டும் ரவுண்டானாவில் வந்தடைந்தது. இப்பேரணியில் ரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம் என்ற வாசகத்துடன் கல்லூரி மாணவ மாணவியர்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி சென்றனர்.இதில், அந்தியூர் ரத்த தான இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.