அம்மாபேட்டை அருகே தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அம்மாபேட்டை அருகே சிறைக்கு சென்று வந்த விரக்தியில் தறிப்பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஸ்குமார் (வயது 36). தறிப்பட்டறை தொழிலாளி. சதீஸ்குமாருக்கு ராதா என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், இரண்டாவதாக பிருந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் இவரை விட்டு பிரிந்து சென்றதால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவதாக கவிதாமேரி என்பவரை திருமணம் செய்து கொண்டு, அம்மாபேட்டை அருகே உள்ள கோணார்பாளையம் வடக்குதோட்டம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கவிதாமேரியின் முன்னாள் கணவருக்கு பிறந்த மகன் சஞ்சய்சலாமன் மற்றும் மகள் மீராவுடன் வசித்து வந்தவர் மீராவுடன் தவறாக நடந்து கொண்டதற்கு சிறை சென்றுள்ளார். பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தவர் அதே பகுதியில் உள்ள தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து, சிறைக்கு சென்று வந்ததில் விரக்தியில் இருந்த சதீஸ்குமார் நேற்று அதிகாலை வீட்டின் அட்டை ஆங்கிளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.