ஆற்று மீன்களை வெடி வைத்து பிடிக்க முயன்ற போது நேரிட்ட விபத்தில் கைகள் சிதைந்தன

ஆர்.என்.புதூரில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா வெடித்ததில் தொழிலாளி கைகளில் படுகாயம் ஏற்பட்டது;

Update: 2021-10-19 08:00 GMT

வெடிகுண்டு வீசி மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக வெடித்ததில் கைகள் சிதைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு ஆர்.என்.புதூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்( 40 ). கூலித் தொழிலாளியான இவர் இன்று காலை பவானி காவிரி ஆற்றில் மீன்களை  வெடிகுண்டு வீசி  பிடிப்பதற்காக தோட்டா திரியை பற்ற வைத்தபோது திடீரென தோட்டா வெடித்தது.  இதில் அவரது 2 கைகள் சிதைந்தன. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News