அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையம் ஆணைக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (43). கூலித்தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு பள்ளிபாளையத்தில் இருந்து அம்மாபேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சென்று விசாரணை செய்து ஆனந்தனின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.