பவானி அருகே கோவில் பூட்டை உடைக்க முயன்ற தொழிலாளி கைது!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கோவில் பூட்டை உடைக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;
கைது செய்யப்பட்ட கண்ணையன்.
பவானி அருகே கோவில் பூட்டை உடைக்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையத்தில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் பூட்டை நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்மநபர் ஒருவர் கல்லால் உடைத்து கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய அவரை பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், 'திருச்சி மாவட்டம் துறையூர் செட்டிபாளையம் கல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் கண்ணையன் (வயது 42) என்பது தெரியவந்தது.
மேலும், கூலித்தொழிலாளியான இவர் கரும்பு வெட்டுவதற்காக ஒரு கும்பலுடன் குப்பிச்சிபாளையம் வந்து நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு, பின்னர் கோவிலுக்கு சென்று கதவின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளார்' என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணையனை கைது செய்தனர்.