பவானி அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி கைது
சித்தோடு அருகே சிறுமியை கடத்திய தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பவானி அருகே உள்ள சித்தோடு ராயபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி கோபி. இவர் 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபியை கைது செய்தனர். மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.