ஈரோடு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்
ஈரோடு மூலபட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
மகளிர் தினத்தையொட்டி, ஈரோடு மூலபட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதீபம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகிளா காங்கிரஸ் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயா, கிருஷ்ணவேணி உள்ளிட்ட மகிளா காங்கிரஸ் அணி சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனையடுத்து மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதீபத்திற்கு கேக்கை ஊட்டி மகிழ்வித்தார். இதனைத் தொடர்ந்து, மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதீபம் தலைமையில், கேஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.