மஹா சிவராத்திரியையொட்டி அந்தியூரில் பால்குடம் எடுத்துச்சென்ற பெண்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்.;
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் சிங்கார வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இன்று இரவு மகா சிவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, அந்தியூர் பகுதியில் உள்ள பெண் பக்தர்கள் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதன் பிறகு, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.