கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-09 04:30 GMT

பைல் படம்

தருமபுரி மாவட்டம் பொம்முடி பழைய ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கௌரி கொளப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கௌரி திடீரென மாயமானர். பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில், மாரியப்பன் அளித்த புகாரில் பேரில், சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News