ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூரில் சாமி கும்பிட சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-17 10:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சாந்தி (வயது 52). இந்நிலையில் நேற்று சாந்தி ஒரிச்சேரிபுதூர், அய்யர் தோட்டத்திற்கு அருகே உள்ள தன்னாட்சி முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர், தோட்டத்தின் வண்டி தடத்திற்கு மேற்புறம் உள்ள விவசாயத் தோட்ட கிணறு அருகே சாந்தி  வந்து கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News