தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்: தென்னை மரங்கள் நாசம்
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காட்டு யானைகள் கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து தென்மரங்கள் நாசம் செய்தன.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் சுமார் 30 தென்னை மரங்களை நாசம் செய்தன. இந்த மாவட்டத்தின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றுமு் தண்ணீரைத் தேடி அடிக்கடி அப்பகுதியின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக வனப்பகுதியின் அருகே உள்ள நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேவா. இந்த விவசாயின் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 3 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் அவர் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளார். வழக்கம்போல் தோட்டத்திற்கு மாதேவா சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள மாதேவாவின் தோட்டத்துக்குள் புகுந்து தென்னங்குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது.
சுமார் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதப்படுத்திவிட்டு சென்றதால் அப்பகுதி விவசாயிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறையினருக்கும் மாதேவா தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி மாதேவா கூறுகையில், யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொண்டார்.