மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்

சிவகிரியில் மூன்று வயது குழந்தையுடன் காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.;

Update: 2021-12-13 11:15 GMT
மொடக்குறிச்சி அருகே  குழந்தையுடன் மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்
  • whatsapp icon

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் மாவீரன் (வயது 32). இவரின் மனைவி பிரியா (வயது 25). தம்பதியருக்கு ஐந்து வயதில் மகள், மூன்று வயதில் மகன் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு சிவகிரி அருகே தாண்டாம்பாளையத்துக்கு மனைவி, மகனுடன் மாவீரன் வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்துக் கொண்டு கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். மகள் சொந்த ஊரிலேயே உள்ளார். அவரை பார்க்க கடந்த, 6ம் தேதி சென்றார்.

இதையடுத்து, ஊர் திரும்பிய நிலையில் பள்ளிபாளையத்தில் உள்ள தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து மொபைல்போனில் மனைவியிடம் பேசியுள்ளார். மகனுடன் பள்ளிபாளையம் வருவதாக தெரிவித்து பஸ்ஸில் வந்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாவீரன் அளித்த புகாரின்படி சிவகிரி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News