அம்மாபேட்டை அருகே கணவனை காணவில்லை என மனைவி புகார்
தன்னை தேட வேண்டாம் என்று தகவல் சொல்லிவிட்டு சென்ற கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, மனைவி காவல்நிலையத்தில் புகார்.;
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் ஜெனிபர். இவருக்கு அந்தோணிசார்லஸ் என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த வருடம் கடன் பிரச்சினையில் சிக்கி கொண்ட அந்தோணிசார்லஸை அவரது மனைவி நகையை விற்று பிரச்சினை தீர்த்து வைத்துள்ளார். தற்போது இவரது கணவர் பெருமாள் மலை பகுதியில் தனியார் ஜவுளி மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 25ஆம் தேதி வேலைக்கு சென்ற அந்தோணிசார்லஸ் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதன் பின்னர் அவரை அருகில் உள்ள பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். இதற்கிடையே அந்தோணிசார்லஸ் தனது மனைவி செல்போனுக்கு தனக்கு இன்னும் கடன் பிரச்சினை தீரவில்லை என்னை தேட வேண்டாம் என்றும், கேரளா பக்கம் செல்வதாக தகவல் சொல்லியுள்ளார். இந்நிலையில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக் கோரி மனைவி ரோஸ்லின் ஜெனிபர் அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.