சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.;
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). இவர், செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். மேலும், ஆழ்துளை கிணறு நீர்மட்டம் பார்க்கும் வேலையும் செய்து வந்தார்.
இவருக்கு, ரேவதி (34) என்ற மனைவியும், சுதிக்சன் (13), கபிலேஷ் (11) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால், தங்கவேல் மனைவியை தங்கவேல் பிரிந்து சூரியம்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். ரேவதி மகன்களுடன் தாளவாடி ஜோரகாடு பகுதியில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை தங்கவேல் ரேவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தங்கவேலுக்கும், ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ரேவதி கணவனை கீழே தள்ளி அருகே கிடந்த கல்லை எடுத்து தங்கவேலின் தலையில் போட்டுள்ளார்.
இதில் அலறி துடித்தபடி தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாளவாடி போலீசார் தங்கவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்னர