ஆப்பக்கூடல் அருகே மனைவி மகன்கள் மாயம்: கணவர் போலீசில் புகார்
Missing Cases - ஆப்பக்கூடல் அருகே மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.;
Missing Cases -ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிப்புதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி கருப்பாயி என்கிற மைதிலி (35). இவர்களது மகன்கள் சசிகார்த்தி (14), லோகேஸ்வரன் (13). குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 22ம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு கருப்பாயி தனது இரு மகன்களுடன் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய பவானி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குமார் அளித்த புகாரில் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2