ஈரோட்டில் 1,002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடியில் நலத்திட்ட உதவிகள்
Welfare Assistance To Beneficiaries ஈரோடு மாவட்டத்தில் 1,002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி புதன்கிழமை (இன்று) வழங்கினார்.;
Welfare Assistance To Beneficiaries
ஈரோடு மாவட்டத்தில் 1,002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி புதன்கிழமை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அருகே உள்ள பிளாட்டினம் மஹாலில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, வருவாய்த்துறையின் சார்பில் 907 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டிலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 44 ஆயிரத்து 575 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,002 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 5 லட்சத்து 98 ஆயிரத்து 375 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.