அந்தியூரில் மனுநீதி நாள் முகாம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அந்தியூரில் மனுநீதி நாள் முகாமில் ரூ.38.59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பிரம்மதேசத்தில் உள்ள சண்முகா மஹாலில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 172 பயனாளர்களுக்கு ரூ.38 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மற்றும் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்கள். பின்னர், கலந்து கொண்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் , அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.