ஈரோட்டில் சதமடித்தது வெயில்: வாகன ஓட்டிகள் அவதி
ஈரோட்டில் இன்று 100.76 டிகிரி வெயில் வாட்டியது
ஈரோட்டில் இன்று 38.2 டிகிரி செல்சியசாக வெயில் (100.76 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரித்தது. மழையற்ற வறண்ட வானிலை தொடரும் நிலையில், வெயில் கொளுத்துவதால், பகலில் வீடுகளில் முடங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.