ஈரோடு: வெள்ளோடு அனைத்து வணிகர் பேரவை சார்பில் 16 நாட்களாக பொதுமக்களுக்கு நீர்மோர்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அனைத்து வணிகர் பேரவை சார்பில் 16 நாட்களாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.;

Update: 2025-04-16 01:30 GMT

வெள்ளோடு அனைத்து வணிகர் பேரவை சார்பில் 16 நாட்களாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அனைத்து வணிகர் பேரவை சார்பில் நீர்மோர் பந்தல் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து 16 நாட்கள் பொதுமக்களின் தாகம் தணிக்க குடிநீர், மோர் வழங்கப்பட்டது. இதன் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


விழாவுக்கு, வணிகர் சங்க தலைவர் வி.டி.ஆர்.பாபு தலைமை தாங்கினார். செயலாளர் எம்.சுடலைமணி வரவேற்று பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் பி.செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

இந்த விழாவில் சங்க துணைத்தலைவர் அரவிந்த்குமார், துணைச்செயலாளர் கணேஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் காமராஜ் நன்றி கூறினார்.

Similar News