ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
ஈரோடு மாவட்டம் வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.;
வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊராட்சிக் கோட்டை நீரேற்று நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்றதும் குடிநீர் சீராக வழங்கப்படும். எனவே பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.