தொடர் மழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 28.5 அடியாக உயர்ந்துள்ளது

Update: 2022-05-13 09:15 GMT

வரட்டுப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் பாலக்கரை, கொங்காடை, தாமரைகரை ஆகிய பகுதியில் பெய்யக்கூடிய மழை நீரானது வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன. இந்த அணையின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும், வனவிலங்குகளும் தாகம் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 80.0 மி.மீ மழை பெய்தது. இதன் காரணமாக 27.4 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 28.5 அடியாக உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News