பவானிசாகர் அணை நீர்மட்டம் 95.77 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.77 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.77 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதி உள்ளது.
கடந்த மாத இறுதியில் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது.
நேற்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,886 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,026 கன அடியாக சரிந்தது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.59 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.77 அடியாக உயர்ந்து, 96 அடியை எட்டும் நிலையில் உள்ளது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.54 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.