நீர்பிடிப்பு பகுதியில் மழை; பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து 4,428 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2023-11-23 03:30 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில்  பரவலாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து 4,428 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,227 கன அடியாக இருந்த நிலையில், மழையின் காரணமாக நேற்று காலை நீர்வரத்து 4,428 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.51 அடியாகவும், நீர் இருப்பு 12.95 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பாசனப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News