பவானிசாகர் அணை பூங்காவில் 3 நாட்களுக்கு அனுமதி இல்லை
பவானிசாகர் அணை பூங்காவில் இன்று முதல் நாளை மறுநாள் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக, பவானிசாகர் பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கரில் உள்ள பூங்காவில், சிறுவர்களுக்கான படகு வசதி, சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்று ஆகியவை உள்ளன. விடுமுறை நாட்களில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஒமிக்ரான் தொற்று காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பவானிசாகர் அணை முன்பு உள்ள பொழுது போக்கு பூங்காவில், இன்று டிச.31 (வெள்ளிக்கிழமை) முதல், நாளை மறுநாள் ஜன.2 (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களுக்கு, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.