மாத்தூரில் கிராமசபைக் கூட்டம்: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார், மனுக்களை பெற்றுக் கொண்டார்.;

Update: 2021-12-29 04:09 GMT

அந்தியூர் அருகே உள்ள மாத்தூரில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தில் சிறப்பு மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். 


இதையடுத்து, கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கொடுத்த குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக, வாக்களித்து வெற்றிபெறச் செய்த பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்து கொண்டார். இதில், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், தொ.மு.ச மத்திய சங்க பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News