ஈரோட்டில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 59 வாகனங்களுக்கான பொது ஏலம் சனிக்கிழமை (மே.28) நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனங்கள், 51 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் ஆணைகல்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் (மே.28) சனிக்கிழமை நடைபெறுகிறது.
முன்னதாக, ஏலம் எடுக்க வரும் நபா்கள் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் வாகனங்களைப் பாா்வையிடலாம். மேலும், ஏலத்தில் பங்கேற்கும் நபா்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயினும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். முன்வைப்புத் தொகையை செலுத்திய நபா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா்கள்.
மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் அதற்கு உண்டான சரக்கு மற்றும் சேவை வரியை அப்போதே செலுத்தி வாகனத்தை தங்களது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஈரோடு மாவட்டம் அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, 8300037067,9942402732, 9976057118 தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.