ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு வி.சி.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களின் பயிற்சி காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும். பதவியை ரத்து செய்துவிட்டு கள உதவியாளராக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.