ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 271.70 மி.மீ மழை பதிவு!

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 51 மி.மீ மழை பதிவானது.;

Update: 2025-05-18 03:00 GMT

தாளவாடி பகுதியில் நேற்று பெய்த மழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மல்குத்திபுரம் அருகே தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 51 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று (மே.17) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.18) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

ஈரோடு - 14.60 மி.மீ, 

மொடக்குறிச்சி - 25 மி.மீ,

கொடுமுடி - 6 மி.மீ,

பெருந்துறை - 8 மி.மீ, 

சென்னிமலை - 16 மி.மீ, 

பவானி - 19.20 மி.மீ, 

கவுந்தப்பாடி - 11.20 மி.மீ, 

அம்மாபேட்டை - 20 மி.மீ, 

வரட்டுப்பள்ளம் அணை - 51 மி.மீ, 

கோபிசெட்டிபாளையம் - 16.20 மி.மீ, 

எலந்தகுட்டைமேடு - 9 மி.மீ, 

கொடிவேரி அணை - 19 மி.மீ, 

குண்டேரிப்பள்ளம் அணை - 10.20 மி.மீ, 

நம்பியூர் - 16 மி.மீ, 

சத்தியமங்கலம் - 18.30 மி.மீ, 

பவானிசாகர் - 7.80 மி.மீ, 

தாளவாடி - 4.20 மி.மீ, 

மாவட்டத்தில் மொத்தமாக 271.70 மி.மீ ஆகவும், சராசரியாக 15.98 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News