முழு கொள்ளளவை எட்டும் நிலையில் வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32.64 அடியாக உள்ளது.

Update: 2022-05-24 11:30 GMT

வரட்டுப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீர், வன விலங்குகளுக்கு கோடை காலங்களில் தாகம் தீர்ப்பதற்காகவும், விவ சாயிகளின் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது. அணையில் 33.46 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கப்படுகிறது.

அந்தியூர் மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரவலாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் கடந்த 13ம் தேதி 28.58 அடி தண்ணீர் இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 14ம் தேதி 29.56.அடியும் 16ம் தேதி 30.02 அடியும், 18ம் தேதி 31.82 அடியும் 20ம் தேதி 32.19 அடியும், 21ம் தேதி 32.45 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது 32.45 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

எந்த நேரத்திலும் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மலைப்பகுதிகளிலும் வரட்டுப்பள்ளம் அணை சுற்றுப் பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32.64 அடியாக உள்ளது. பர்கூர் மலை பகுதிகளில் மழை பெய்தால் விரைவில் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News