அந்தியூர் அருகே 96.70 சதவீதம் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையாது தற்போது 96.70 சதவீதம் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
அணை நீர்மட்டம் - 32.97 அடி. (33.46 அடி)
நீர் இருப்பு, 135 மில்லியன் கன அடி.
அணைக்கு தற்போதைய நீர்வரத்து 14 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் கிடையாது.
தற்போது, அணையானது 96.70 சதவீதம் நிரம்பியுள்ளது.