வாணிபுத்தூர் பேரூராட்சி: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

வாணிபுத்தூர் பேரூராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர், கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

Update: 2022-02-11 11:45 GMT

மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிபுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் திமுக சார்பில் கலையரசி என்பவரும், அதிமுக சார்பில் கஸ்தூரி என இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, இன்று அதிமுக சார்பில், போட்டியிட்ட கஸ்தூரி என்பவர் தனது கணவர் வேலுச்சாமியுடன் டி.என்.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவபாலன் உடன் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் அதிமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த கஸ்தூரிக்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

Tags:    

Similar News