சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
சித்தோடு அருகே சரக்கு லாரி மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
திருப்பூரில் இருந்து சரக்கு லாரியானது, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, சரக்கு லாரியானது ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே சென்றபோது, கண்டெய்னர் லாரியானது எதிர்பாராத விதமாக சரக்கு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவர் முருகேசன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார், வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவர் யூசப் (வயது 36) என்பவரிடம் விசாரிக்கின்றனர்.