நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோபியில் அதிமுக சார்பில் விருப்ப மனு
கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக சார்பில் நகர்புற தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ விருப்ப மனுக்களை பெற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்ரமணியம், கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சி நாதன், நகர செயலாளர் பிரினியோ கனேஷ், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்து ரமணன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசும்போது, அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகளை ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று எடுத்துரைத்து அதிமுக சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும் என்றார்.