நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அனைத்து பகுதிகளிலும் 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

Update: 2022-02-04 12:15 GMT

மாநகராட்சி அலுவலகத்தின் கதவு மூடப்பட்டுள்ள காட்சி.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் காலை 10 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பை அடைந்து 5 மணிக்கு நிறைவு பெற்றவுடன்  கதவுகள் மூடப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக,  வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியளவில் முடிவடைந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அலுவலக கேட்டானது சரியாக மாலை 5 மணியளவில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டது. மேலும் 4 மணிக்கு முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய காத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News