ஈரோட்டில் அடையாளம் தெரியாத மர்ம விலங்கு நடமாட்டம்
ஈரோடு அருகே அடையாளம் தெரியாத மர்ம விலங்கு நடமாட்டம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;
ஈரோடு நகரிலிருந்து 46 புதுார் ஊராட்சிக்கு செல்லும் வழியில், சஞ்சய் நகரில் உள்ள வீட்டில் சிசிடிவி கேமரா உள்ளது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம விலங்கின் நடமாட்டம் அந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இதனையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வன அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து, இரவு நேரத்தில் கண்காணித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத மர்ம விலங்கின் நடமாட்டம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.