பவானி, அந்தியூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.;
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கிய திமுகவினர்.
அந்தியூர் :-
திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் , சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாளை விழாவானது இன்று கொண்டாடப்பட்டது. அந்தியூர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் விழா நடைபெற்றது.அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திடலில் முன்பு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து இவ்விழாவில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கினார். இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
பவானி :-
பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி ஊராட்சி கவுந்தப்பாடி நால் ரோட்டில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் பவானி தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கே.பி.துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பவானி கே ஏ சேகர் , பவானி தெற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் , சலங்கபாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் , கவுந்தப்பாடி ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் , ஒன்றிய மாவட்ட அணி அமைப்பாளர்கள் , கவுந்தப்பாடி தொமுச நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கழக அலுவலகத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கினர்.