அம்மாபேட்டை அருகே கல்லூரி பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனம் சொருகி நின்றது
அம்மாபேட்டை அருகே தனியார் கல்லூரி பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.;
சேலம் கொளத்தூர் அடுத்துள்ள கோட்டையூரை சேர்ந்தவர் கார்த்திக் (21). ஈரோடு தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அம்மாபேட்டை அருகே மாணிக்கம்பாளையம் பிரிவில் தனியார் கல்லூரி பஸ் ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த கார்த்திக் எதிர்பாரா தவிதமாக கல்லூரி பஸ்சின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் பின்புறத்தில் புகுந்தது. மாணவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி அனுப்பி சிகிச்சைக்கு வைத்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.