அந்தியூர் அருகே நடந்த வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;

Update: 2022-03-03 09:30 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த காந்தம்பாளையம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த விபத்தில், பருவாச்சி அம்மன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால் சம்பவ இடத்திலும், அவரது நண்பர் பழனிச்சாமி கோவை மருத்துவமனையிலும் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் கரடு அருகே உள்ள கண்ணடிபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News