பெருந்துறை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: முதியவர் பலி
பெருந்துறை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சோளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 70). விவசாயி. இவர் நேற்று கால்நடை தீவனம் வாங்குவதற்காக, சோளிபாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது காடபாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்லப்பன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.