கோபி: இருசக்கர வாகனம் மோதி துணி வியாபாரி பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி துணி வியாபாரி உயிரிழந்தார்.;

Update: 2021-12-09 12:30 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் நடந்து சென்று துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள மொடச்சூர் சாலையில் நடந்து சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தினகரன், சந்தோஷ் ஆகிய இருவரும்  ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி, சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News